Header Ads

இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது..

நாகை மாவட்டம் வேதாராண்யம் அருகே நேற்று அதிகாலை இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இந்திய எல்லைக்குள்பட்ட நடுகடலில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற விசைப்படகு ஒன்றை சோதனையிட்டனர். அதில், இலங்கை மீனவர்கள் 5 பேர் இருப்பது தெரியவந்தது.

இந்திய கடலோர காவல்படையினர் இலங்கை மீனவர்களிடம் நடத்திய விசாரணையில், காற்றின் வேகத்தில் திசைமாறி வந்துவிட்டதாக இலங்கை மீனவர்கள் கூறினர்.

தொடர்ந்து, படகில் இருந்த ரணில்(வயது-38), அருண்(32), டிலான் மதுரங்கன், தனுஸ்கர்(21), மதுராங்க(24) உள்ளிட்ட 5 இலங்கை மீனவர்களை கைது செய்து, காரைக்கால் தனியார் (மார்க்) கப்பல் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் மீண்டும் விசாரணை நடத்தி, வேதாராண்யம் மரைன் போலீஸார் மற்றும் மீன் வளத்துறை அதிகரிகளிடம் ஒப்படைத்தனர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.