Header Ads

அம்பானி மகனின் திருமணத்தால், அசரப்போகும் இந்தியா..

இந்தியாவில் வர்த்தகத்துறையின் ஜாம்பவானாக திகழும் உலக கோடீஸ்வர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கும் ‘ரோஸி புளு’ என்கிற பிரபல வைர நிறுவனத்தின் உரிமையாளரான ரசூல் மேத்தாவின் மகள், ஷ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மும்பையில் உள்ள ஆடம்பர ஹோட்டலான ஓபராய் ஹோட்டலில் திருவிழா போன்று நடைபெறவுள்ளது.

(திருமணம் நடைபெறவுள்ள The Oberoi Hotel, Mumbai )
இக்கோடீஸ்வர திருமணத்திற்கு உலக வர்த்தக ஜாம்பவான்கள், உலக கோடீஸ்வரர்கள், சினிமா பிரபலங்கள் என திரண்டு வந்து சிறப்பிக்கவுள்ளனர் .
முக்கியமான விடயம் என்னவெனில், ஆகாஷும் ஷ்லோகா மேத்தாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் எனவும், இந்நிகழ்வானது நிச்சயமாக இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் எதிர்பாக்கப்படும் மிகவும் முக்கியம் வாய்ந்த திருமண வைபவமாக மாறியுள்ளது.
இருப்பினும், நிச்சயமாக இத்திருமணம் பலர் வாய் பிளக்கும் அளவு ஆடம்பரம் நிறைந்த கொண்டாட்டமாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.