Header Ads

அடுத்த ரஷ்யரும் லண்டனில் மரணம் ... வீட்டில் பிணமாக கிடந்து உறவினரால் மீட்க்கப்பட்டார்...



ஸ்கிரிப்பால் என்னும் முன் நாள் ரஷ்ய புலனாய்வு அதிகாரியை, பிரித்தானிய மண்ணில் வைத்து நச்சுவாயு கொடுத்து தாக்கியது ரஷ்யா. இது நடைபெற்று 9 நாட்கள் ஆகின்ற நிலையில், லண்டனில் வசித்து வந்த செல்வந்தரான நிக்கோல் என்னும் ரஷ்ய நாட்டவர் நேற்று அதிகாலை வீட்டில் இறந்து கிடந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளார்கள். இவர் ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டினின் மிகப் பெரிய எதிரியான போறிஸ் என்னும் பெரும் செல்வந்தரின் நண்பர் ஆவார். பொறில் 2013ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுவரை அதற்கான காரணம் கண்டு பிடிக்கப்படவே இல்லை.

இன் நிலையில் நிக்கோல் ரஷ்யாவில் 5 வருடம் சிறை தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை ஆனால். அவர் ரஷ்யாவில் பல வியாபாரங்களை நிர்வகித்து வந்தார். அவருக்கும் புட்டினுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் , புட்டின் அவரை சிறையில் அடைத்தார். எஞ்சிய சொத்துகளை பிரிட்டனுக்கு மாற்றிக்கொண்டு. பிரித்தானியா வந்த நிக்கோல். அகதிகள் அந்தஸ்த்து கோரி லண்டனில் தங்கி விட்டார். இன் நிலையில் நேற்றைய தினம் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் என அவரது உறவினர்கள் சற்று முன் அறிவித்துள்ளார்கள்.

இதனை ரஷ்யாவில் உள்ள ஊடகங்கள் முதலில் வெளியிட்டுள்ளமையே பெரும் அதிர்சி தரும் சம்பவமாக உள்ளது என்கிறார்கள். ஏன் எனில் லண்டனில் அவர் இறந்து கிடந்தவேளை. லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் சென்று உடலை கைப்பற்றிய வேளை. ரஷ்யா ஊடகங்கள் அடுத்த செக்கனே இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. அவ்வளவு சீக்கிரம் இந்த செய்தி எப்படி கசிந்தது ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.