Header Ads

தலையை துண்டித்து டாக்டர் படுகொலை..

உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகரான லக்னோவில் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக நேற்று இரவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது லக்னோவின் பலகன்ஜி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் அஸ்கார் அலி(45) என்பது தெரியவந்தது. அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

கொலைக்கான காரணம் கண்டறியப்பட வில்லை. டாக்டர் அஸ்கார் கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோவில் மருத்துவரின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.