Header Ads

இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, திருமண ஆசையை தீர்த்துக்கொண்டேன்..

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி (வயது 46). தனது மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோருடன் வெள்ளாம்புத்தூரில் வசித்து வந்தார். சமயன் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த மாதம் 21-ந் தேதி இரவு ஆராயி வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்தார். ஆராயி, தனம், சமயன் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த சமயன் அதே இடத்தில் இறந்து விட்டான். காயம் அடைந்து மயங்கி கிடந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (37) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவன் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் பல இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும், அவர்களிடம் இருந்த நகைகளை பறித்தும் தெரிய வந்தது.

கைதான தில்லைநாதன் போலீசாரிடம் கூறியுள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். படிப்பு சரியாக வராததால் கட்டிட வேலைக்கு சென்றேன். எனக்கு 20 வயது ஆனபோது திருமண ஆசை ஏற்பட்டது. ஆனால், எனக்கு யாரும் பெண் தரவில்லை. மேலும் எனது குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் மனவேதனை அடைந்தேன். அதனால் குடிப்பழக்கத்துக்கு ஆளானேன்.

அப்போது திருமணமாகாத இளம்பெண்களை குறிவைத்து தாக்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து திருமண ஆசையை தீர்த்துக் கொள்ள முடிவு செய்தேன்.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை வில்லன் இரும்பு கம்பியால் தாக்குவதும், இதனால் கதாநாயகன் சுயநினைவை இழப்பது போன்ற காட்சி இருப்பதை கண்டேன். அதேபோன்று நானும் பெண்களை தாக்கி அவர்கள் சுயநினைவு இழக்கும்போது அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டேன்.

ஆண்கள் இல்லாத வீடுகளை அறிந்து அங்கு சென்றேன். இரவு நேரத்தில் லுங்கி மட்டும் அணிந்து கொண்டு அந்த வீடுகளில் புகுந்து இளம்பெண்களை இரும்பு கம்பியால் தாக்கி அவர்கள் மயக்கம் அடைந்த பின்பு பாலியல் பலாத்கராம் செய்து எனது ஆசையை நிறைவேற்றி வந்தேன்.

2017-ம் ஆண்டு மே மாதம் வெள்ளாம்புத்தூரில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவரை தாக்கி தாலி சங்கிலியை பறித்து சென்றேன். அதே கிராமத்தில் மேலும் 3 பெண்களை தாக்கி அவர்களிடமும் நகையை பறித்து சென்றேன்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் யாரும் புகார் செய்யாததால் தொடர்ந்து இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வந்தேன்.


இதேபோல் கடந்த 21-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு எனது லுங்கி மற்றும் சட்டையை கழற்றி வைத்து விட்டு ஜட்டியுடன் ஆராயி வீட்டுக்குள் புகுந்தேன். சிறுமி தனத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். அவள் கூச்சல் போட்டாள். அந்த சத்தம் கேட்டு ஆராயி, சமயன் ஆகியோர் எழுந்து வந்து என்னை தடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவர்களை இரும்பு கம்பியால் தாக்கினேன். அவர்கள் மயங்கி விழுந்தனர். மீண்டும் தனத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். அவள் கூச்சலிட்டதால் அவளது தலையில் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன்.

இவ்வாறு தில்லைநாதன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.