Header Ads

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு நேர்ந்த கெதி..

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராவரம் சுப்பிரமணி வட்டத்தை சேர்ந்த முருகன் மகன் ஞானமணி (வயது24) கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர் வெட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார்.

இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமியை கண்டித்தனர்.

இதையடுத்து கடந்த 7-ந்தேதி ஞானமணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஞானமணியின் வீட்டுக்கு சென்று அவர்களது மகளை அழைத்தனர். அப்போது ஞானமணியின் உறவினர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் சிறுமியின் பெற்றோர் வாழ்ந்த குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

இது பற்றி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் ஞானமணி சிறுமியை அழைத்து கொண்டு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இது சம்பந்தமாக சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை திருப்பத்தூர் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஞானமணி மீது சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிறுமியின் பெற்றோரை தாக்கியவர்கள் மற்றும் வீட்டுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.