Header Ads

இலங்கையில் வெளியாகியது, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.  www.doenets.lk  என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைய நாள் இரவு 10 மணிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடமுடியும் என்றும். அதற்கு அடுத்த நாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் விநியோகிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பரீட்சிசைப் பெறுபேறுகளை பார்ப்பதற்கு ஆவலாக இருந்த நிலையில், 11.30 மணிவரை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாததால் அதிர்ப்தி அடைந்திருந்தனர்.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.