Header Ads

சாதாரண தர பரீட்சை; தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

சாதாரண தர பரீட்சை; தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!
2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கம்பஹா - ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி - மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி - மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை - சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி - சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
கொழும்பு - தேவி பாலிகா வித்தியாலயத்தின் என்.ஹேரத், கொழும்பு - சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தின் ஏ. பெர்ணான்டோ, நுகோகொட - சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆர். குமாரசிங்க ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழிமூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.