Header Ads

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ஹெலிகாப்டர்..

உத்தரகாண்ட் மாநிலம் ‌ஷமோலி மாவட்டம் பரஹோட்டி பகுதியில் எல்லை கோட்டை தாண்டி இந்திய வான்பரப்பில் சீன ஹெலிகாப்டர்  நுழைந்து வட்டமிட்டது.

சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது ஒரே மாதத்தில் 4-வது தடவையாகும். கடந்த 10-ந்தேதி அந்நாட்டை சேர்ந்த 3 ஹெலிகாப்டர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி வந்து பரஹோட்டி பகுதியில் 5 நிமிடம் வட்டமடித்தன. அதற்கு முன்பு மார்ச் 8-ந் தேதியும், பிப்ரவரி 27-ந் தேதியும் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பகுதியில் வட்ட மடித்தன.

மீண்டும் சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறில் நுழைந்துள்ளதால் இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.