Header Ads

தந்தையை விடுவிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்திய சுதாகரரின் பிள்ளைகள்!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் இன்று காலை ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில்
தமிழ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டிலேயே ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.