Header Ads

முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடும் வீடியோ - காங்கிரஸ் கண்டனம்.

மும்பை நகரைச் சுற்றிலும் முன்பு மிதி, பாய்சர் தகிசார், ஓசிவாரா என 4 நதிகள் ஓடின. காலப்போக்கில் கட்டிடங்கள், குடியிருப்புகள் என பெருகி நதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மும்பையில் மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து மராட்டிய மாநில அரசு சார்பில் நதிகள் விழிப்புணர்வு பிரசார வீடியோ தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் நதிகள் பின்னணியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பாடல் பாடி நளினமாக நடனமாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இதேபோல் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நிதி மந்திரி சுதிர்முகந்திவார், மும்பை மாநகராட்சி தலைவர் அஜாய் மேத்தா, போலீஸ் கமி‌ஷனர் தத்தா பட்சல் சிகர் ஆகியோரும் விழிப்புணர்வு பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வீடியோ மும்பையில் வெளியாகியுள்ளது. இதில் முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடுவதாக காங்கிரஸ் கிண்டல் செய்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி மராட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த் கூறியதாவது:-



முதல்முறையாக மராட்டிய முதல்-மந்திரி, மனைவி மற்றும் அதிகாரிகள் பாடி நடனமாடி நடித்து இருக்கிறார்கள். இதுதொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் நடித்ததற்காக முதல்-மந்திரி மற்றும் மந்திரி, அதிகாரிகள் சம்பளம் பெற்று இருக்கிறார்கள். இந்த தொகையை வழங்கியது யார்? என விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் தயாரித்து இருந்தால் அதில் அதிகாரிகள் நடித்தது ஏன்? அவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தது யார்? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.