Header Ads

ரெயில் முன்பாய்ந்த காதல் ஜோடி.. நடந்தது இதுதான்.

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21). வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த ரம்யாவும் (19) காதலித்து வந்தனர். ரம்யா கவரப்பேட்டை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

காதல் விவகாரம் வெளியே தெரிந்ததும் இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதல் ஜோடி தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் உறவினர்கள் தங்களை பிரித்து விடுவார்களோ என்று பயந்த ஆகாசும், ரம்யாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இன்று அதிகாலை 2 பேரும் அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

திடீரென அவர்கள் அவ்வழியே சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்தனர். இதில் உடல் நசுங்கி ஆகாசும், ரம்யாவும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் ரம்யாவின் உடல் இரண்டு துண்டானது. இதனை கண்டு ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.