Header Ads

மங்கோலியாவில் இருந்து சீனாவை தாக்கும் மணல் புயல்..

மங்கோலியாவின் எல்லையோர பகுதியில் உள்ள கோபி பாலைவனப் பகுதியில் இருந்து சீனாவை மணல் புயல் தாக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. 24 மணி நேரத்துக்கான இந்த எச்சரிக்கயின்படி தலைநகர் பீஜிங் மற்றும் சில மாகாணங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து வீசிய மணல் புயலினால் தலைநகர் பீஜிங் மற்றும் டியன்ஜின், ஹேபேய், ஷான்க்சி, ஜிலின், லியோனிங், ஹீலோங்ஜியாங், க்சிஹியாங் ஆகிய மாகாணங்களுக்கு உட்பட்ட சுமார் 15 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு மணல் மற்றும் தூசினால் ஏற்பட்ட மாசு நிறைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.