Header Ads

குடிநீர் பைப் உடைந்ததால் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட கார் - வைரலாகும் வீடியோ..



மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவாலி பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து இருந்தது. அதிலிருந்து மெதுவாக தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு குழாயில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் மிக வேகமாக வெளியேறியது. இதில் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தூக்கி எறியப்பட்டது. மேலும், பல வாகனங்கள் சேதமடைந்தன. 

குழாயில் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியை சுற்றிலும் தண்ணீராக காட்சியளித்தது. கார் தூக்கி எறியப்பட்டதை கண்ட பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து ஓடினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றனர். இதையடுத்து, குழாயை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. தண்ணீரின் வேகத்தினால் பெரிய கார் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.