Header Ads

பெட்ரோல் பங்கில் தீ.. பலரின் உயிரை காப்பாற்றிய டிரைவர்..

மத்தியப்பிரதேச மாநிலம் நார்சிங்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்தது. இந்த தீ பைப் வழியாக பரவியது. தீ பெட்ரோல் பங்க் முழுவதும் பரவினால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அங்கு பூமிக்கடியில் பெரிய கிடங்குகளில் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு பரவுவதற்கு முன் டிரைவர் அந்த இடத்திலிருந்து லாரியை வெளியே ஓட்டிச்சென்றார்.


தீப்பற்றி எரித்து கொண்டிருக்கும் லாரியை ஓட்டிச் சென்றது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். லாரி டிரைவருக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பெட்ரோல் பங்கில் தீப்பிடித்தற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. டிரைவர் தன் உயிரை பணயம் வைத்து செய்த காரியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.