Header Ads

அடுத்த அடிபாடு ஆரம்பம்- மாதம்பையில் முஸ்லீம் இளைஞர் சிங்கள வயோதிபரை அடித்துள்ளார்..


நாட்டில் எங்கே , எப்படி இன மோதல் வெடிக்கும் என்றே தெரியாத நிலையில். கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது என்று சலித்துக் கொள்கிறார்கள் பொலிசர். ஏன் என்றால், நேற்று இரவு, சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர், வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பையில்  பேக்கரித் தொழிலில் ஈடுபடும் 27 வயதுடைய திருமணமான முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வயோதிபரை நேற்று  இரவு மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்  மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில்  மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை ஒரு வித பதற்ற நிலை காணப்பட்டுள்ளது.

இதனால் அங்கே ஆயிரக்கணக்கில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். சரி அவர்களா பார்த்து இது தற்செயலாக நடந்தது என்று தணிந்து போனாலும். இவர்கள் குவித்துள்ள ராணுவத்தை பார்த்து, உசுப்பேறி இரு இனத்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.