Header Ads

லண்டனில் கள்ள கறன் எடுத்து மாட்டி தவிக்கும் பெரும் புள்ளிகள்... சனி ஞாயிறு ஆனா காள்ள வேலை



இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தான் கள்ள கறன்ட் (மின்சாரம்) எடுக்கிறார்கள் என்றால். லண்டனிலும் இதனை கொண்டு வந்து விட்டார்கள் சில தமிழ் பெரும் புள்ளிகள். கடைகளை வைத்து பெரிய வியாபாரம் பார்க்கும் இவர்கள். வாரம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகளை லாபமாக சம்பாதிக்கிறார்கள். ஆனால் மின்சாரக் காசை கட்ட இவர்களுக்கு விருப்பம் இல்லை.

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாள் என்பதனால், மின்சார வழங்குனர்களின் வேலை ஆட்கள் சிலவேளை வரக் கூடும். இதனால் சனி மற்றும் ஞாயிற்றும் கிழமைகளில் கள்ள மின்சாரம் எடுப்பது இந்த கடை முதலாளிகளின் வழக்கமாக உள்ளது. இதற்காகவே லண்டனில் சிலபல தமிழ் எலக்ரீஷியன்கள் இருக்கிறார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்று சனிக் கிழமை இரவு கள்ள மின்சாரத்தை தொடுப்பதும்.

பின்னர் ஞாயிறு இரவு சென்று சரியான மின்சாரத்தை தொடுத்து விடுவது வழக்கம். அதாவது மீட்டருக்கு சென்று பின்னர் மின்சாரம் கடைக்கு போகும். ஆனால் மீட்டருக்கு செல்லாமல் நேரடியாக மின்சாரத்தை கடைக்கு கொடுப்பதை தான் கள்ள கறன் என்கிறோம். இவ்வாறு செய்து விடுவதற்கு கடை உரிமையாளரிடம் 50 பவுண்டுகளை இந்த தமிழ் எலக்ரீஷன் வாங்குகிறார்கள். அனால் இந்த பருப்பு ரூட்டிங்கில் வேகவில்லை. அங்குள்ள என் -பவர் நிறுவனம்  இவ்வாறு கள்ள மின்சாரம் எடுத்து வந்த தமிழ் கடை உரிமையாளரை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள்.

பெரும் அளவில் தண்டப் பணம் கட்டவேண்டிய நிலைக்கு அவர் தற்போது தள்ளப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.எனவே ஏனைய கடை முதலாளிகள் கவனமாக இருப்பது நல்லது. குறித்த செய்தி லோக்கல் பேப்பரில் வந்துள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் திடீர் சோதனைகள் நடத்தப்படலாம்....

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.