Header Ads

இந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா ?



பிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்கள் லைசன்ஸை எடுத்திருக்கலாம். அதன் பின்னர் உங்களுக்கு சில நோய் வந்திருக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் முறைப்படி அறிவித்து இருக்க வேண்டும். இல்லையென்றால், 1,000 பவுண்டுகள் அபராதமும் , தற்காலிக தடையும் விதிக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளார்கள். என்ன நோய் இருப்பின் நீங்கள் அறிவிக்க வேண்டும் என்ற விடையம் கீழே உள்ளது. தமிழர்கள் இதனை பார்த்து நடந்து கொள்வது நல்லது.

உயர் ரத்த அழுத்தம்
டயபிட்டிக்(நீரிழிவு நோய்)
எயிட்ஸ்
சிறுநீரக கோளாறு(அல்லது செயல் இழந்து போதல்)
நரம்பு தளர்ச்சி (ஆத்திரைட்டிஸ்)
கடும் ஞாபக மறதி
திடீரென மயக்கம் வரும் நிலையில் உள்ளவர்கள்
இதய கோளாறு உள்ளவர்கள்
மிகக் கடுமையாக கோபம் கொண்டவர்கள்(ஹைப்பர் டென்ஷன்)
மன அழுத்தம் உள்ளவர்கள்
கண்களுக்கு சிகிச்சை பெறும் நபர்கள்
இரட்டை விம்பம் தோன்றும் நபர்கள்(டபுள் விஷன்)
உடலில் சக்கரை குறைதல்(இன்சுலின் அதிகம் சுரக்கும் நபர்கள்)
பார்சவாதம் வந்தவர்கள்..

இது போன்ற வியாதிகள் அல்லது இதனை ஒத்த வியாதிகள் இருந்தால் நீங்கள் அறிவிக்க வேண்டும். பொலிசார் உங்களை மறிக்கும் வேளை. தற்போது அவர்களுக்கு உங்கள் GP இன் தகவலையும் சேர்த்துப் பெற முடியும். அத்தோடு உங்கள் மருத்துவ குறிப்புகளையும் அவர்களால் பெற முடியும். இது 4.4.2018 முதல் அமுலுக்கு வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.