Header Ads

தேர்தலில் 100 வயது வேட்பாளர் போட்டி..

கர்நாடக சட்டசபை தேர்தலில் 100 வயது வேட்பாளர் களத்தில் குதித்துள்ளார். அவரது பெயர் எச்.எச். துரைசாமி, சுதந்திர போராட்ட தியாகியான இவர் பெங்களூரில் வசிக்கிறார். கடந்த வாரம் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.

கர்நாடக மாநிலம் உதயமானதும் 1952-ம் ஆண்டு நடந்த முதலாவது சட்டசபை தேர்தலில் இருந்து இப்போது 2018-ல் நடைபெறும் 15-வது தேர்தல்வரை அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.

1952-ம் ஆண்டுக்கு முன் 1951-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கலாசிபாளையம் வார்டில் போட்டியிட்டார், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர் தனது முதலாவது தேர்தலில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

என்றாலும் தொடர்ந்து சளைக்காமல் அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு தேர்தல் மன்னன் பட்டம் பெற்றுள்ளார். இப்போதும் அவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவரே நேரில் வந்து மனு தாக்கல் செய்தார்.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இவரது மனைவி லலிதாம்மா. துரைசாமி கூறுகையில், எனக்கு வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை என்றார்.

சுதந்திர போராட்ட காலம் முதல் அனைத்து இயக்கங்களிலும் பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த இரும்பு பாலம் எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.