Header Ads

மெரினாவில் 5000 பொலிசார் குவிப்பு.. காரணம் இதுதான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று 25 அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலவன் பாகவி, ஊடக ஒருங்கிணைப்பாளர் ரகீம் மற்றும் தொண்டர்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 25 அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். இது தொடர்பாக 25 அமைப்புகளுக்கும் போலீசார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

போலீசாரின் வேண்டுகோளை ஏற்று 25 அமைப்புகளும் தங்கள் போராட்டத்தை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாற்றியுள்ளனர். அதன்படி இன்று பிற்பகலில் 25 அமைப்புகளும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துகிறார்கள்.

1000-க்கும் மேற்பட்டோர் சேப்பாக்கத்தில் கூடி போராட்டம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் தடையை மீறி மெரினா கடற்கரைக்கு செல்லாமல் தடுக்க 5000 போலீசார் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கடற்கரை சாலை வரையுள்ள 300 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரைக்கு வரும் சாலைகளான ராதாகிருஷ்ணன் சாலை, வாலாஜா சாலை, சிவானந்தம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, பாரதி சாலை, ராஜாஜி சாலை, சாந்தோம் சாலை ஆகிய பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.