Header Ads

ஜூன் 6ம் தேதி நீதிமன்றத்தில் ரஜினி ஆஜராக உத்தரவு..

சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக்மோசடி வழக்குத் தொடர்ந்தார். அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 6-ம் தேதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.