Header Ads

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சிக்கினார்..

உத்தரப்பிரதேசம் மாநிலம் திவோரியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை கடந்த புதன்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் வாலிபரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வெளியான பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சிறுமிகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.