Header Ads

உலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை- இன்றோடு 9 வருடங்கள் முக்கிய 8 பேர் மரணம்2009ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 4ம் திகதி, உலகையே அதிரவைத்த சமர் அது. பல இடங்களை இழந்த நிலையில் இருந்தார்கள் விடுதலைப் புலிகள். இவ்வாறு பின்னோக்கி பின்னோக்கி நாம் சென்றால் என்ன செய்வது என்று கூறி, சினம் கொண்ட தலைவர் ஆனந்த புரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கிவிட்டார். அவ்விடத்தை ராணுவம் நெருங்கியவேளை. எவ்வளவோ கேட்டும் அவர் நகரவில்லை. இதனால் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினார் பொட்டாம்மான். ஆனால் தலைவரை போட்டு தள்ள என உடனே அந்த இடத்தை பெட்டி போட்டு சூழ்ந்து கொண்டார்கள் சிங்கள ராணுவம். முதலில் இதனை உடைத்து பொட்டு அம்மான் சாள்ஸ் அன்ரனி ஆகியோர் தலைவரோடு வெளியேற.

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர்  கடாபி, பிரிகேடியர்  விதுஷா, பிரிகேடியர்  மணிவண்ணன், பிரிகேடியர்  துர்க்கா, கேணல் அமுதா, கேணல் நாகேஷ், கேணல் தமிழ் செல்வி, என 8 முக்கிய தளபதிகள் களம் இறங்கினார்கள். ஸ்ரீலங்கா ராணுவவத்தின் பெட்டியை உடைத்து, பலத்த அடி கொடுத்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை ராணுவத்தை பின் நோக்கி நகர்த்தினார்கள். இதனால் சிங்கள ராணுவம் பலத்த இழப்பை சந்தித்தது. 58படையணி, 53 படையணி, கொமுறு படையணி , என பல படை அணிகளை ஸ்ரீலங்கா படை அங்கே நகர்த்தி பெரும் போர் தொடுத்தும் அது அனைத்தும் தேல்வியில் முடிய. இறுதியில் ஆனந்தபுரப் பகுதி மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசினார்கள். தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகள் தொடக்கம், அனைத்து நாசகார குண்டுகளையும் வீசி, அங்கே இருந்த தளபதிகள் உட்பட போராளிகளை மாய்தார்கள்.

சுமார் 600 முதல் 670 போராளிகள் 15,000 ஆயிரம் படையினரை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்ட சம்பவம் உலகை உலுப்பியது. இச்சமரை அமெரிக்கா தனது உளவு பார்க்கும் சாட்டலைட் மூலம் கண்காணித்தது. இது எப்படி சாத்தியம் என்று உலகில் உள்ள பல வல்லரசுகள் திகைத்தார்கள். ஆனால் எதனையும் அவர்கள் வெளிக்காட்டவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், ஒரு நாட்டு ராணுவம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது ஆனையிறவுச் சமரில் தான் என்று பதிவாகியுள்ளது. ஆனால் அதனை கூட கூகுள் விக்கிப் பீடியா போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அழித்து விட்டார்கள். அது போல ஓசை படாமல் இந்த சமரையும் அவர்கள் மறைத்தார்கள். ஆனால் எமது காவிய நாயகர்கள் அங்கே வீரத் தமிழர்கள் என்றால் யார் .. மறவர் என்றால் யார் என்பதனை சிங்களவர்களுக்கு நன்கு உணர்த்தி அங்கே விதையானார்கள்... நவீன போர் வரலாற்றில் ஆனந்தபுரச் சமர் ஒரு காவியமாக திகழ்கிறது.

1 comment:

  1. இப்படி எதனை நாட்களுக்கு கதை சொல்லிக்கொண்டு இலங்கையில் தமிழர் இருப்பை இல்லாமல் செய்து ,புலம்பெயர்தேசங்களின் .அங்கு பிறந்து வளரும் புதிய தலைமுறைக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமை தாய் மொழிகல்வியை அழித்து ,தங்களின் குரோதங்களை குழந்தைகளுக்கு கற்பித்து ,மக்கள் நிதியை கொள்ளையடித்து வாழும் ஒரு கூடத்தை உருவாக்கி விட்டு போன உலக அரசியல் அறிவரி கூட தெரியாமல் கடைசி போர்வரை தன இனத்தையே குரோதம் வளர்த்து அழித்துதான் சாதனை

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.