Header Ads

சீனாவின் வடபகுதியில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி..

சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதி அவ்வப்போது நிலநடுக்கங்களுக்கும், நிலச்சரிவுகளுக்கும் இலக்காகி வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இங்கு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவுக்குள் சிலர் சிக்கி கொண்டனர்.

மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 9 பேரின் பிரேதங்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.