Header Ads

ஈழத்தமிழர்களுக்கு மிரட்டல் சவால் விடுத்த ‘BIGG BOSS’ சினேகன் இவர் தான் என்ன கொடுமை இது



பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் கட்டிப்புடி வைத்தியம், டைனமிக் திருமணம் என்று பல கில்மாக்களுக்கும் பெயர் போனவர். அண்மையில் யாழ் திரைப்படக் கலைஞர்களின் உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட ‘சாலைப்பூக்கள்’ திரைப்படம்  தனியார் திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்தியாவின் பிரபலங்கள் சினேகன் மற்றும் வையாபுரி விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்னதாக அவர்கள் பேசியவற்றை TV இல் போட்டு இருந்தார்கள்.இந்நிலையில் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் சினேகன்.

சாலைப்பூக்கள் படக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார். தன்னை எடுத்த நேர்காணலை அனுமதியில்லாமல் ஒளிபரப்பக்கூடாது. எங்களை விற்பதற்கு இங்கு யார் அனுமதியளித்தது. மீறி நடந்தால், தமிழ்நாட்டில் இறங்கியவுடன் ஊடகங்களை அழைத்து நடந்ததை கூறப் போவதாகவும் தனக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அப்படி ஒளிபரப்பினால் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் தலா 5 லட்சம் கொடுக்கவேண்டும் என்று மிகவும் கடுமையான தொனியில் கூறி ஈழத்தமிழர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சினேகன்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.