Header Ads

குடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக் கல்லை போட்டு படுகொலை செய்த கணவர்..

வியாசர்பாடி, சிவகாமி அம்மையார் காலனி 6-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ஜாபர்.

அதே பகுதியில் உள்ள கடையில் வேலை பாரத்து வருகிறார். இவரது மனைவி முபாராக் பேகம் (வயது52).

இவர்களது மகள் ஜாஸ்மின். இவரது கணவர் முகமது அப்பாஸ். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். ஜாஸ்மினின் 4-வது மகன் யூசுப்.

நேற்று இரவு ஜாஸ்மினும் அவரது கணவரும் வீட்டில் உள்ள தனி அறையில் தூங்கினர். முன்பக்க அறையில் முபாராக் பேகம், பேரன் யூசுப்புடன் படுத்து இருந்தார்.

நள்ளிரவு அப்துல்ஜாபர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் மனைவி முபா ராக்பேகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர்.

எனினும் கோபத்தில் இருந்த அப்துல்ஜாபர் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவில் எழுந்த அவர் தூங்கிக் கொண்டிருந்த முபாராக்பேகம் தலையின் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டார்.

இதில் தலை நசுங்கி முபாராக்பேகம் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அருகில் படுத்து இருந்த பேரன் யூசுப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவன் உடல் முழுவதும் ரத்தம் தெளித்து இருந்தது. எனினும் அவன் கொலை நடந்தது தெரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.

இதையடுத்து அப்துல் ஜாபர் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரது மகளும், மருமகனும் தனி அறையில் தூங்கியதால் கொலை நடந்தது அவர்களுக்கு தெரியவில்லை.

இன்று அதிகாலை ஜாஸ்மினும், முகமது அப்பாசும் எழுந்து வந்தபோது வீட்டில் முபாராக்பேகம் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் அருகே ரத்தக்கறையில் தூங்கிய மகன் யூசுப்பை அவர்கள் பதறியடித்தப்படி தூக்கினர். அவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முபாராக் பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அப்துல்ஜாபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொருக்குப்பேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அப்துல்ஜாபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் மனைவி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.