Header Ads

"ஏலியன் எலும்புக்கூடா வெளிவந்த ரகசியத் தகவல்கள்!

"ஏலியன் எலும்புக்கூடு"; வெளிவந்த ரகசியத் தகவல்கள்!
சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச் அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தை போன்று இருந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அது வேற்றுக்கிரகவாசியினுடையது என்றும், மேலும் பல மர்மத் தகவல்களும் அதைப் பற்றி வெளிவந்துகொண்டிருந்த நிலையில், இந்த ஊகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய 
அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த எலும்புக்கூடு தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், அது மனிதனின் டி.என்.ஏ.யை ஒத்ததாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உருவத்தில், தாயின் கருவின் அளவையும், எலும்பு வளர்ச்சியில் ஆறு வயதுக் குழந்தையின் அளவையும் கொண்ட இந்த எலும்புக்கூட்டுக்கு ‘அட்டா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த எலும்புக்கூட்டின் தலை, வேற்றுக்கிரகவாசியின் தலையைப் போலவே கூர்மையான வடிவிலும், பத்து விலா எலும்புகள் எனப் பல குறைபாடுகளுடனும் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்பட்டது எனவும், சாதாரண மனிதக் குழந்தையான இது, இறந்து பிறந்த நிலையிலோ அல்லது பிறந்தவுடன் இறந்தோ இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.