Header Ads

ஐ.எஸ், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு, கொழும்பில் இருந்த நபர்கள்!

ஐ.எஸ், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு கொழும்பில் தங்கியிருந்த நபர்கள்!
ஐ.எஸ், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு பலர் கொழும்பில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இந்திய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தியா, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் ஐ.எஸ், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்துள்ளதாக குறித்த நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சுமார் 90 பேர் 2016 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐ.எஸ், ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகவும். அவர்களுள் பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ், ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களுள் கேரளாவைச் சேர்ந்த 16 பேர் தாக்குதல்களின் போது உயிரிழந்துள்ளனர் எனவும் குறித்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.