Header Ads

எம்.ஜி. ஆரின் உத்தரவில், விடுதலைப்புலிகளுக்கு உதவிய ஜெயலலிதா..

எம்.ஜி. ஆரின் உத்தரவு; விடுதலைப்புலிகளுக்கு உதவிய ஜெயலலிதா: வெளிவந்த உண்மை!
எம்.ஜி. ஆரின் உத்தரவில் ஜெயலலிதா 4 கோடி ரூபா (இந்திய பெறுமதி) நிதியை போயஸ் தோட்டத்தில் வைத்து பிரபாகரனுக்கு வழங்கினார் என்று அண்ணா திரா­விட முன்­னேற்­ற ­க­ழ­கத்தின் ஸ்தாபக உறுப்­பி­னர் சி.பொன்­னையன் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த ஊடகத்தின் நேர்காணல் இவ்வாறு அமைந்திருந்தது..,
கேள்வி: ஈழத்தில் உரு­வான ஆயுத ரீதி­யான பல்­வேறு போராட்ட அமைப்­புக்கள் தொடர்பில் எம்.ஜி.ஆர். எவ்வா­றான நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருந்தார்?
பதில்:- அப்­போ­தி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., அமிர்­த­லிங்­கத்தின் புதல்வருடைய அமைப்பு உள்­ளிட்ட அனைத்து அமைப்­புக்­களும் தமி­ழ­கத்தில் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்கு இடமளித்து, அனை­வ­ரு­டனும் நல்­லு­றவைப் பேணினார் எம்.ஜி.ஆர்.
இந்தச் ­ச­ம­யத்தில் தான் பாண்­டி­ ப­ஜாரில் ஒரு நாள் புளொட் அமைப்பின் தலைவர் முகுந்­த­னுக்கும் (உமாகேஸ்­வரன்), தம்­பிக்கும் (பிர­பா­கரன்) இடையில் துப்­பாக்கி பிர­யோகம் இடம்­பெற்­றது. இதன்­போது தம்பி உள்­ளிட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டனர்.
உட­ன­டி­யாகப் புரட்­சித்­த­லைவர் என்னைத் தொடர்பு கொண்டார். நான் அப்­போது சிறை உள்­ளிட்ட விவகாரங்­க­ளுக்குப் பொறுப்பான அமைச்­ச­ராக இருந்தேன். உட­ன­டி­யாக தம்பி உள்­ளிட்­ட­வர்­களை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பணித்தார். அதற்கு அமை­வாக தம்பி பிரபாகரன் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு விடு­தலை அளிப்பதற்கு நட­வ­டிக்­கை­களை எடுத்து சிறை­யி­லி­ருந்து நேர­டி­யாக புரட்­சித்­த­லை­வ­ரி­டத்தில் அழைத்துச் சென்றேன். அத்­துடன் புரட்­சித்­த­லைவர் அனைத்து அமைப்­புக்­க­ளையும் அழைத்தார்.
இந்தச் ­ச­ம­யத்தில் புரட்­சித் ­த­லைவர் கூறிய வசனம் கூட எனக்கு இன்றும் நினைவில் இருக்­கின்­றது. விடுதலைக்­காக கருத்­து­ வே­று­பாட்­டுடன் ஐந்­தாறு மாடு­க­ளாக மேய்ந்து கொண்­டி­ருக்­கின்­றீர்கள். உங்­களைத் தாக்க வெறி­பி­டித்த சிங்­களம் என்ற சிங்கம் பார்த்­துக்­ கொண்­டுள்­ளது. தனித்தனியாகச் சென்றால் நீங்கள் ஏமாந்து விடு­வீர்கள். ஆகவே ஒற்­று­மை­யாக இருங்கள். நான் உதவுகின்றேன் என்றார்.
அதன் ­பி­ர­காரம் பார­பட்­ச­மின்றி ஆயுதம் உட்பட அனைத்து உத­வி­க­ளையும் அவர் வழங்­கினார். தி.மு.க.வின் பின்­ன­ணி­யுடன் புரட்­சித்­த­லை­வ­ரையே விமர்­சித்த ரெலோவின் தலைவர் சிறி­ச­பா­ரட்ணம் உள்ளிட்டவர்களுக்கு கூட உத­வி­களை வழங்­கு­வதில் புரட்­சித்­த­லைவர் வேறு­பாட்­டினைக் காட்டியிருக்கவில்லை.
கேள்வி:- எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா ஆகிய தலை­மை­க­ளி­டத்தில் மாறு­பட்ட நிலைப்­பா­டுகள் காணப்­பட்­டது ஏன்?
பதில்:- முழு­மை­யாக அப்­ப­டிக்­கூ­றி­ வி­ட­மு­டி­யாது. புரட்­சித்­த­லைவர் இருந்­த­போது அவ­ரு­டைய பணிப்பில் விடுத­லைப்­பு­லி­க­ளுக்­கான நிதி அம்­மாவின் கையால் தான் போயஸ் தோட்­டத்தில் வைத்து வழங்­கப்­பட்­டது. நானும் அச்­ச­ம­யத்தில் அங்கு இருந்தேன். விடு­த­லைப்­பு­லிகள் சார்பில் தம்பி பிரபாகரனும், அன்ரன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம் ஆகியோர் வந்திருந்தார்கள்.
அந்த நேரத்தில், அம்மா, இந்தியாவில் வடக்கு எங்களை அடக்கியாளுகிறது. ஹிந்திமொழி திணிப்பு நடைபெறுகின்றது. இந்தியாவில் தமிழர்களின் கொடியை டில்லியில் பறக்க விடமுடியாது. தமிழர்களின் கொடியை நாட்டுவதென்றால் தனி நாடு தேவை. அந்த தனித் தமிழ் நாட்டினை அமைக்க கூடியவர் நீங்கள் தான். தனி ஈழத்தின் கொடி ஐ.நா.சபையில் இருக்க வேண்டும். அதற்கான அச்சாணியாக இந்த நான்கு கோடி ரூபா (இந்திய பெறுமதி) நிதியை புரட்சித்தலைவர் முற்பணமாக வழங்குகின்றார் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிக் கொடுத்திருந்தார்.
இருப்பினும் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் இறப்பின் பின்னர் புலிகள் அமைப்பு தொடர்பில் அம்மா வருத்தமடைந்திருந்தார். இருப்பினும் உண்மை நிலைமைகள் எடுத்துரைக்கப்பட்ட பின்னர் நான் விரும்பும் ஆட்சி டில்லியில் அமைந்தால் தனி ஈழத்தினை அமைத்து தருவேன் என்று தமிழக சட்ட மன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் அம்மா என குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.