Header Ads

லண்டன் பாக் லேன் ஹில்டன் ஹோட்டலில் ஜாலியாக உள்ள மைத்திரி: கண்டுகொள்ளாத தமிழர்கள்..



காமன் வெலத் உச்சி மாநாட்டிற்காக, தற்போது லண்டன் வந்துள்ள முன் நாள் பாதுகாப்பு அமைச்சரும். இன் நாள் அதிபருமான மைத்திரி, பாக் லேன் அதி சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளார். பிரான்ஸ் நாட்டு அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர்கள் வந்தால், தங்கும் 7 நட்சத்திர ஹோட்டல் தான் பாக் லேன் ஹில்டன் ஆகும்.

ஆனால் மகிந்த வந்தால் மாத்திரமே நாங்கள், போராடுவோம்... மைத்திரி வந்தால் கண்டுகொள்ள மாட்டோம் என்பது போல லண்டன் தமிழர்கள் உள்ளார்கள். 2009ம் ஆண்டு உச்சக்கட்ட இன அழிப்பு நடந்தவேளை மைத்திரி பாதுகாப்பு அமைச்சராக இருந்ததை தமிழர்கள் மறந்துவிட்டார்களா ?

இன்று ராஜ மரியாதையோடு , லண்டன் அரசின் விருந்தினராக வந்துள்ளார் மைத்திரி. அதுவும் தமிழர்கள் செலுத்தும் வரிப் பணத்தில் 7 நட்சத்திர ஹோட்டலில் பரிவாரங்களோடு தங்கி உல்லாசமாக இருக்கிறார். நாம் இனியும் வேடிக்கை தான் பார்க்கப்போகிறோமா ?

1 comment:

  1. சிலர் சொரிஞ்சு விட்டு சொரிஞ்சுவிட்டு .தமிழரை மந்தைகளாக பார்க்க கத்திருகின்றார்கள்

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.