Header Ads

கோவில் திருவிழாவுக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை..

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பார்த்த சாரதி. இவரது மனைவி மனோன் மணி. 2 பேரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.

இவர்களுடைய மகன் சதிஷ் (வயது 32). நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சதிஷூக்கு, திருமணமாகி 8 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

சதிஷ் மற்றும் 2 குழந்தைகளையும் பிரிந்து மனைவி சென்று விட்டார். மனைவியை பிரிந்த சதிஷ் மது பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

நாட்டறம்பள்ளி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஏரிக்கோடியில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. நேற்று இரவு அங்கு நடந்த நடன நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சதிஷ் சென்றிருந்தார்.

நிகழ்ச்சியை பார்த்தபிறகு நள்ளிரவு 11 மணியளவில் பைக்கில் வீடு திரும்பினார். பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்றபோது, மர்ம நபர்கள் திடீரென சதிஷ் பைக்கை வழி மறித்து சரமாரியாக தாக்கினர்.

அரிவாளால் சதிஷை கொடூரமாக வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்து, முதுகு, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதில் ஆசிரியர் சதிஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து, தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் சதிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரியரை கொன்றது யார்? மனைவி பிரிந்துச் சென்ற பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.