Header Ads

காவிரி பிரச்சனை தமிழ் நடிகர்கள் பெரும் போராட்டம்- சில கன்னட தமிழ் நடிகர்கள் வரவில்லை



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் திரையுலகினர் இன்றைய தினம் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிவகுமார், கார்த்தி, சத்யராஜ், பிரசாந்த், சிவகார்திகேயன், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எனினும் நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கன்னட தமிழ் நடிகர்களான பிரகாஷ்ராஜ், அர்ஜுன், அதர்வா முரளி, பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் நடத்திய போராட்டம் 3 மணி நேரத்தில் முடிவடைந்துள்ளது.

இந்த போராட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் ரஜினி வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கமலும், ரஜினியும் நடிகர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார்.






No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.