Header Ads

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழும் அதிசய கோழி: இது எப்படி சாத்தியம் மருத்துவர் குழப்பம்



தாய்லாந்தில் நடந்துள்ள அதிசயம் இதுதான்... மருத்துவ உலகத்தையோ புரட்டிப் போட்டு. தற்போது அனைத்து சர்வதேச மீடியாக்களிலும் முதன்மை செய்தியாக இடம்பிடித்துள்ள விடையம் தலை இல்லாத இந்தக் கோழி தான். ஆம் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தத்தோடு தள்ளாடி அலைந்து திரிந்துள்ளது இந்தக் கோழி. இதனைக் கண்ட சுபகாடி என்னும் மருத்துவர். உடனடியாக அதனை எடுத்துச் சென்று முதலுதவி வழங்கி இருந்தார். இன்னும் சில மணி நேரங்களில் அக் கோழி இறந்து விடும். ஆனால் உயிர் உள்ளவரை அதனை பாதுகாப்போம் என்று நினைத்த மருத்துவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

ஏன் என்றால் இந்தக் கோழி இறக்கவே இல்லை. கண்கள் இல்லாத இக் கோழி எங்கே நடப்பது என்று தெரியாமல் நடந்து சென்று முட்டி மோதுவதும். வாய் இல்லாத காரணத்தால் உணவை உட்கொள்ள முடியாமல் தவிப்பதையும் அவர் அவதானித்தார். தொண்டையில் துளை ஒன்றை போட்டு, அதனூடாக உணவை அவர் கொடுக்க ஆரம்பித்தார். உணவு இன்றி சோர்வடைந்த அந்தக் கோழி மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தது பெரும் அதிசயம் தான். மூளை இன்றி இக் கோழி எவ்வாறு உயிர் வாழ முடியும் ? இது மருத்துவ உலகத்திற்கே பெரும் சவாலாக அமைந்தது. ஆனால் மனிதர்களுக்கு தான் மூளை மிக மிக அவசியம்.



சிலவகை மிருகங்களுக்கும் ஊர்வன மற்றும் பறவைகளுக்கு சில சமயங்களில் முள்ளந்தண்டு மூளையைப் போல செயல்படும் என்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள். சில வகை ஊர்வனவுக்கு மூளை கிடையாது. முள்ளந்தண்டே மூளையை போல செயல்படும். அவ்வாறு இந்தக் கோழி மூளை இழந்த பின்னர், முள்ளந்தண்டின் உதவியோடு வாழ பழகி இருக்கலாம். இல்லையென்றால் மிக் முக்கியமான ஒரு பரிணாம வளர்ச்சியை இது எட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படி என்றாலும் உயிர் வாழவேண்டும் என்பதே ஒரு உயிரினத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதற்காக அந்த உயிரினம் உடலில் பல மாற்றங்களை காலத்திற்கு காலம் கொண்டுவருகிறது. இதனையே நாம் பரிணாம வளர்ச்சி என்கிறோம். கடலில் வாழும் பல உயிரினம் , பல மில்லியன் ஆண்டுகள் பின்னர் தரையில் வாழவும் கற்றுக் கொள்கிறது அல்லவா.

அந்த வகையில் இன் நிகழ்வானது பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. இன்று வரை இக் கோழி உயிருடன் உலவி வருகிறது. தற்போது இக் கோழியைக் காண என பல உயிரியல் விஞ்ஞானிகள் தாய்லாந்திற்கு படை எடுத்து வருகிறார்கள். செயற்கை தலை ஒன்றை செய்து பொருத்த முடியுமா ? என்ற கோணத்தில் கூட உயிரியல் விஞ்ஞானிகள் ஆராட்சியில் இறங்க உள்ளார்கள் என்று சர்வதேச ஊடகங்கள் கருத்து செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.