Header Ads

தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டும் மாணவர்கள் - அச்சத்தில் ஆசிரியர்கள்..

மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று தேர்வு நடைபெற்றது. தேர்வின் போது மாணவர் ஒருவர் பார்த்து எழுதினார். அதனை தேர்வின் மேற்பார்வையாளர் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ள வில்லை. ஆசிரியர் அவரை தேர்வு எழுதக்கூடாது என கூறினார். இதனால் கோபமடைந்த மாணவர் ஆசிரியரை தாக்கினார். பின்னர் இதை வெளியே கூறினால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். 



இதனால் தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்வு பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரை பிடித்து அவர் மீது தற்கொலைக்கு முயற்சி செய்தல், தேர்வில் மோசடி செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர், 'மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற சூழ்நிலையில் நாங்கள் எவ்வாறு கல்லூரியை நடத்துவது' என கூறினார்.

மாணவர்கள் தவறு செய்து விட்டு மாட்டுக்கொண்டால் தற்கொலையை ஆயுதமாக கையாள்கின்றனர். இது சமூகத்தில் தவறான உதாரணமாக அமைகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.