Header Ads

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பு விழா - டொனால்ட் டிரம்ப் பங்கேற்கிறார்..

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். சுமார் 100 கோடி டாலர்கள் செலவில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பிரமாண்டமான அமெரிக்க தூதரகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தூதரகத்தின் திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளலாம் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் பிரதமரை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பல ஆண்டு காலமாக, பல்வேறு அமெரிக்க அதிபர்கள் அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதியாக ஜெருசலேம் விவகாரம் இருந்து வந்துள்ளது. அவர்கள் அனைவருமே தேர்தல் பிரசாரத்துக்காக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை நிறைவேற்றக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால், நான் அதை நிறைவேற்றி முடித்து இருக்கிறேன்.

ஜெருசலேமில் கட்டப்படும் தூதரகத்துக்கு நாம் வெகு குறைவாகவே செலவு செய்துள்ளோம். அந்த பணிகளை கவனித்து கொள்ள சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பலநூறு கோடி டாலர்களில் மிக பிரமாண்டமாக இதை செய்து முடிப்பார்கள்.

இந்த புதிய தூதரகம் விரைவில் திறப்புவிழா காணவுள்ளது. இதில் நான் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று இந்த பேட்டியின்போது டிரம்ப் குறிப்பிட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.