Header Ads

வடமாநிலங்களில் கடும் புயலுடன் பெய்த கனமழை - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு..

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று முன்தினம் இரவு புழுதி புயல் திடீரென தாக்கியது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழையும் பெய்தது. இந்த புயல் மழை காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின; மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் ஆங்காங்கே விழுந்தன. 



முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் உயிரிழப்பு அதிகமாக இருந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் வியாழக்கிழமை புயல் மழை ஓய்ந்து கணக்கெடுப்பு பணி தொடங்கியபோது உ.பி.யில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உ.பி.யில் நேற்று மாலை நிலவரப்படி 64 பேரும் ராஜஸ்தானில் 31 பேரும் இறந்ததாக தகவல் வெளியானது. ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 100 தாண்டியது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 127 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 73 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.யின் ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 46 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தானில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 7, உத்தரகாண்டில் 4, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் தலா 4 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பாரத்பூர் பகுதிகளை முதல்வர் வசுந்தரா ராஜே இன்று பார்வையிட உள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.