Header Ads

தெருநாய்கள் கடித்து குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு..

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் காய்ராபாத் பகுதியில் தெருநாய்கள் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சிறுவர்-சிறுமிகளை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. அப்பகுதியில் உள்ள திகாரியா கிராமத்தில் இன்று காலை 6 மணியளவில் 11 வயது சிறுமி வயலில் சென்றுகொண்டிருந்தபோது தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்து கடித்துள்ளன.

இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுமி தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளாள்.  சத்தம் கேட்டு கிராம மக்கள் வயலுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டாள்.

இதேபோல் குர்பாலியா கிராமத்தில் 12 வயது சிறுவன் இன்று காலை மாந்தோப்புக்கு சென்றபோது நாய்கள் சுற்றி வளைத்து கடித்துள்ளன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு சென்று சிறுவனை மீட்டனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்தான்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காய்ராபாத் பகுதியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் நாய்கள் கடித்ததில் 14 சிறுவர்-சிறுமிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.