Header Ads

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு - 29 பேர் பலி..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதியில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே மோட்டர் சைக்கிளில் வந்த தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் பணியில் அனைவரும் ஈடுபட்டிருந்த நிலையில், அடுத்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் பலியானார். மேலும் 2 போலீசார் உட்பட 27க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒரே இடத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அசாதாரண சூழ்நிலையை மாற்ற போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பலி எண்ணிக்கை  29-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.