Header Ads

2 குழந்தைகள் நாய் கடித்து பலி..

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்குதலால் குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்து வருகின்றனர்.  கடந்த செவ்வாய்க்கிழமை சிட்டாபூர் மாவட்டத்தில் 3 குழந்தைகள் நாய் கடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிட்டாபூர் மாவட்டத்தில் இன்று தெரு நாய் கடித்து இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மகிஷாங்பூர் கிராமத்தில் கீதா என்ற சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த நாய் சிறுமியை கடித்து குதறியது. அதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.  பதன்பூர் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திரா என்ற சிறுவன் மாம்பழம் பறிக்க சென்ற போது கூட்டமாக வந்த நாய்கள் கடித்து கொன்றன.

மேலும்,பேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரின்கால் என்ற சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி ஒருவர் நாய் கடித்து படுகாயமடைந்தனர். தொடர்ச்சியாக நாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.