Header Ads

சினிமா தியேட்டரில் சிறுமி கற்பழிப்பு..

ஐதராபாத்தின் புறநகர் பகுதி போரபந்தாவில் விஜேதா என்ற சினிமா தியேட்டர் உள்ளது. இதன் அருகே குடிசை பகுதி இருக்கிறது. குடிசை பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால் அருகே உள்ள சினிமா தியேட்டருக்கு சென்று அங்குள்ளவர்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

தியேட்டர் வளாகத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக சிறுமி ஒருவர் சென்றார். தியேட்டர் ஊழியர் பிரசாந்த் (25). அந்த சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் ஊழியர் பிரசாரத்தை கைது செய்தனர்.

கைதான தியேட்டர் ஊழியர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.