Header Ads

மண்டையில் போட்டு தள்ளி ஆளை முடிக்கும் புதுவகை ட்ரோன்: கதையல்ல நிஜம் வீடியோ இணைப்பு



உலகில் முதன் முறையாக ஒரு நபரின் முகத்தை பாத்து, அவரை பின் தொடர்ந்து சென்று சரியான நேரம் வருகையில் நெற்றியில் சுட்டு ஆளை கொல்லும் விமானத்தை உருவாக்கியுள்ளார் ஒரு விஞ்ஞானி. இதனை பல நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முன்பாக செய்து காட்டி, அவர்களை கிலி கொள்ள வைத்துள்ளார். கைக்கு அடக்கமான இந்த ஆளில்லா விமானம் ஒலியை எழுப்பாது. மிகவும் நுற்பமானது. ஒரு நபரை 30 நிமிடம் வரை வானில் பின் தொடர்ந்து செல்ல வல்லது. சரியான நேரம் வரும்போது, திடீரென தாளப் பறந்து அவர் நெற்றி அருகே சென்று பலமான துப்பாக்கி குண்டு ஒன்றை வெடிக்க வைக்க வல்லது.

குண்டு நேரடியாக மூளையை துளைத்துச் செல்வதனால் ஒரு கணத்தில் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பார். இந்த விமானம் எதிரிகள் கைகளில் இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால் ரம்பை கூட மிகவும் சிம்பிளாக போட்டு தள்ள முடியும். தாக்க வேண்டிய எதிரியின் படத்தை குறித்த விமானத்தின் கமராவில் காட்டி விட்டு. அன் நபர் செல்லும் பாதையில் அல்லது சற்று தொலைவைல் அதனை பறக்க விட்டால் போதும். அது தேடிச் சென்று அன் நபரை தாக்க வல்லது. அதிர்வின் வாசர்களுக்காக வீடியோ இணைப்பு.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.