Header Ads

மாணவியை கடத்தி கற்பழித்த கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி..

பழனி அருகே பழைய ஆயக்குடி 3-வது வார்டை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 20).

இவர் ஒட்டன்சத்திரத்தை அடுத்த அம்பிளிக்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவரை கடத்தி உள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் தாய், பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகளை நவீன்குமார் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர். மேலும் மாணவியையும் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.