Header Ads

வாட்ஸ்-அப்பில் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புருமன்னா என்கிற பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 19).

இவர் கடந்த மாதம் 16-ந் தேதி கேரளாவில் கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வாட்ஸ்-அப்பில் தகவல் பரிமாறினார். இது அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்த தொடங்கியதும் சாகுல் ஹமீது வாட்ஸ்-அப்பில் இருந்து அந்த தகவலை நீக்கினார்.

இந்நிலையில், கடந்த 22-ந் தேதி சாகுல் ஹமீது மீண்டும் சர்ச்சைக்குரிய ஒரு பதிவை வாட்ஸ்-அப்பில் பதிவிட்டார். அந்த பதிவில் அவர் பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை தேடி வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.