Header Ads

வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்..

‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர்.

இவர் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’ விவகாரத்தில் அவரது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என கூறி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.