Header Ads

ABOUT US

ATHIRVU MEDIA 
Stadhouderskade 9, 
1055 ES 
Amsterdam, 
Netherlands

அதிர்வு இணையம் 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சுயாதீன செய்திச் சேவை. தமிழ் தேசியம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்த நாம், காலமாற்றத்திற்கு ஏற்ப ஜனரஞ்சக செய்திகள், உலகச் செய்திகள் மற்றும் பரபரப்பு செய்திகள் என தற்போது 4ம் தலைமுறை செய்திகளையும் வெளியிட்டு வருகிறோம்.  முன்னர் பிரித்தானியாவில் இருந்த எமது நிலையம், தற்போது ஊடக சுதந்திரம் மிக்க நெதர்லாந்து நாட்டுக்கு 2014 முதல் மாற்றப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு, சுமார் 300 வாசகர்களை மட்டுமோ கொண்டிருந்த அதிர்வு இணையம், 2009ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 90,000 ஆயிரம் வாசகர்களை கொண்ட ஒரு பெரும் செய்தி இணையமாக உருப்பெற்றது. புலிகள் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டவேளைகளில். அங்கு இலங்கை ராணுவம் நடத்திய மாபெரும் மனிதப் படுகொலைகளை அவர்கள் அதிர்வு இணையத்திற்கே நேரடிய அனுப்பிவைத்தார்கள். புலிகளின் குரல் தமிழ் அன்பன்(ஜவான்) புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரின் வேண்டுதலுக்கு அமைவாக நாம் , புலிகள் தந்த பல ஆதாரங்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொடுத்துள்ளோம்.

ஆரம்ப காலகட்டத்தில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவே அதிர்வு இணையம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை நாம் பெருமையோடு இங்கே குறிப்பிட விரும்புகிறோம். ஈழத்தில் நடந்த பல கொடுமைகள், அதனை ஆதாரப்படுத்தும் பல ஒளி நாடாக்களை நாம் BBC, அல்ஜசீரா, சி.என்,என், மற்றும் சனல் 4 போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு கொடுத்து அதனை உலகறியச் செய்துள்ளோம். இதுவரை , ஈழத்தில் 2 இளையோர்களுக்கு சிறு நீரகம்  மாற்ற, பொஸ்பரஸ் குண்டால் பாதிக்கப்பட்ட 2 போராளிகளை, மற்றும் இதய சிகிச்சை உதவி என்று சுமார் 6க்கும் மேற்பட்ட மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம். (ஆபத்தான நிலையில் இருந்தவர்களை)

எமது செய்திகளில் ஏதாவது குறை நிறை இருப்பின் எங்களை மின்னஞ்சல் மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

athirvu@gmail.com

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.