விரிவான செய்திகள்

 

புத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்து போராட்டம்: ( 2ம் இணைப்பு )

24 May, 2013 by admin

சற்று நேரத்துக்கு முன்னதாக, பௌத்த பிக்கு ஒருவர் தனக்குத்தானே மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனை கண்டி பொலிசாரும் உறுதிசெய்துள்ளார்கள். கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். அங்கிருந்த பொதுமக்கள் இவரை மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கால்நடைகளை கொல்வது தொடர்பாகவும், அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறியுமே இவர் தன்னை தீ மூட்டியுள்ளார் என்று மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 22487

DMCA.com