விரிவான செய்திகள்

 

பிக்குகளைச் சுடச் சொன்னது பொட்டம்மான் தான்: கருணா !

16 February, 2012 by admin

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் தலைவர், பொட்டம்மானின் கட்டளைப்படியே அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்டனர். பிக்குகளின் படுகொலைக்கோ அல்லது சிங்களவர் மீதான தாக்குதல்களுக்கோ தான் பொறுப்பு இல்லை என்றும் அனைத்தையும் பொட்டம்மான் கட்டளைப்படியே நடைபெற்றதாக விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அரந்தலாவ பிக்குகள் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ்ச் செல்வனும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். பொட்டம்மான் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னரே என்னை கிழக்கு மாகாண தலைவராக நியமித்தனர் என்றும் கருணா தெரிவித்துள்ளார். தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், பின்னர் துரோகியாக மாறி புலிகளைக் காட்டிக்கொடுத்து இலங்கை அரசோடு வால்பிடித்து திரியும் கருணா தெரிவித்துள்ளார்.

பொட்டம்மான் உள்ளிடோரே அரந்தலாவ பிரதேசத்தில் பிக்குகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர் என்றும், இந்த தாக்குதலுக்கு 6 பேர் கொண்ட சிறிய குழு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நான் அப்போது தொப்பிகல பிரதேசத்திற்கு பொறுப்பான தலைவராக இருந்தேன். கடற்புலிகளுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் பொட்டம்மானே நேரடியாக கட்டளைகளை வழங்கினார். ஆயுதப்படைகளை அவர் கட்டுப்படுத்த முடியாது. எது எப்படி இருந்த போதிலும், பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் போன்றவர்களும், பொட்டம்மானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது எனக் கூறியுள்ளார் கருணா.

புலிகள் இயக்கத்தை உடைத்து கணிசமான அளவுபோராளிகளோடு சுயமாகச் செயல்படப்போவதாக முதலில் அறிவித்தவர் கருணா. கருணா இயக்கத்தை உடைக்கப்போகிறார் அவரை நம்பவேண்டாம் என பல தடவை தேசிய தலைவருக்கு எடுத்துக்கூறிய முக்கிய நபர் பொட்டம்மான் தான். மற்றும் கருணா மட்டக்களப்பில் பணக்கொள்ளையடிப்பில் ஈடுபட்டது, பெண்களோடு தகாத உறவை வைத்திருந்தது போன்ற அனைத்து விடையங்களையும் தேசியதலைவரிடம் தெரிவித்ததும் பொட்டம்மான் தான். அந்த நாள் முதலே கருணாவுக்கு பொட்டம்மான் மேல் கடும் ஆத்திரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The Aranthalawa Massacre was the massacre of 33 Buddhist monks, most of them young novice monks, and four civilians by cadres of the rebel Liberation Tigers of Tamil Eelam organization (the LTTE, commonly known as the Tamil Tigers) on June 2, 1987 close to the village of Aranthalawa, in the Amparadistrict of Eastern Sri Lanka.


|    செய்தியை வாசித்தோர்: 103578

DMCA.com