விரிவான செய்திகள்

 

ஜெனீவாவில் டக்ளசிடம் சுரேன் நேரடிக் கேள்வி: திணறிய டக்ளஸ் !

05 March, 2012 by admin

ஜெனீவா மாநாடுக்குப் போகுமாறு மகிந்தர், டக்ளசுக்கு ஆணையிட உடனே அவர் புறப்பட்டார். யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை அழைத்துச் செல்லாமல், யாழ் மேயர் யோகேஸ்வரியை ஜெனீவாவுக்கு டக்ளஸ் அழைத்துச் செல்லக் காரணம் என்ன ? பின்னர் ஜெனீவாவில் இருவரும் ஒரே விடுதியில் தான் தங்கியும் உள்ளனர். இருவரும் இணைந்து ஒரே காரில் தான் பயணத்தையும் மேற்கொண்டும் உள்ளனர். யோகேஸ்வரியோடு சற்று நிம்மதியாக ஜெனீவாக் குழிரில் சூடு காய நினைத்த டக்ளசுக்கு நேரம் சரியில்லை ! வாருங்கள் மேட்டருக்குப் போவோம் !ஜெனீவா ஐ.நா மனித உரிமை மாநாட்டில் சில தமிழர்கள் அடங்கிய தூதுக்குழுவினர், ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத் தமிழர் பேரவையில்(GTF) இருந்து சென்ற அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், இலங்கைத் தூதுக்குழுவிடன் நேரடியாக விவாதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். பன் நாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கில், சுரேன் தொடுத்த கேள்விகள் டக்ளஸ் தேவானந்தாவை திணறடித்தது. இதனால் இலங்கைத் தூதுக்குழு ஆட்டம் கண்டது !

குறிப்பிட்ட அம்மாநாடு அரம்பித்தவேளை எழுந்த மகிந்த சமரசிங்க, டக்ளஸ் தேவானந்தாவை அறிமுகப்படுத்தி வைத்தார். வட-கிழக்கின் தமிழ்த் தலைவர் என்றும், வட-கிழக்கில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்றும் டக்ளஸ் புகழ் பாடினார் சமரசிங்க. இதேவேளை குறுக்கிட்ட உலகத் தமிழர் பேரவையின்(GTF) பேச்சாளர் திரு.சுரேன் அவர்கள், ஆயுதக் குழுவின் தலைவர் ஒருவர் எவ்வாறு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார் என்று கேள்வி எழுப்பினார். அவ்வாக்குகள் ஆயுதமுனையில் பெறப்பட்டனவா என அவர் மேலும் கேள்வி எழுப்பினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், துணை ஆயுதக் குழுக்களால் கடத்தல் கொலை மற்றும் கப்பம் பெறுதல் போன்றவை நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே அந்த ஆயுதக் குழுவின் தலைவர் நீங்கள் தானே என சுரேன் கேள்வி எழுப்பினார்.

இதனால் படு ஆத்திரமடைந்த, தன்னை புலிகள் 13 முறை கொலைசெய்ய முயற்ச்சி செய்தனர், தான் தப்பிவிட்டேன், இப்போது என் நடத்தையைப் பற்றிப் பேசி என்னை இழிவுபடுத்துகிறார்கள் என்று, டக்ளஸ் மாநாட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத விடையங்களைக் கூறத்தொடங்கினார். இதனை அடுத்து இலங்கைத் தூதுக்குழுவினர் மேற்கொண்டு டக்ளஸ் குறித்து பேசாமல் வேறு விடையங்கள் தொடர்பாகப் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றுசென்றுள்ளனர். இதேவேளை ஜெனீவாவில் 5 நட்சத்திர விடுதியான இன்ரர்-கொண்டினண்டலில் இலங்கைத் தூதுக்குழுவினர் பெரும் பொருட்செலவில் தங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்கள் சென்று வர ஆடம்பர வாகனங்களும் பாவிக்கப்பட்டுள்ளது. மேர்ஸைடிஸ்-பென்ஸ் கார்களையே இலங்கைத் தூதுக்குழுவினர் பாவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது யாழ் மாவட்ட மேயர் மற்றும் டக்ளஸ் ஆகியோர் ஒரே காரில் சென்று ஊர் சுற்றி உள்ளனர். இவர்களுக்கு 2 சுவிஸ் நாட்டவர்களால் பாதுகாப்புவேறு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மண்ணெண்ணை விலையேற்றம், மின்சார விலையேற்றம் மற்றும் பெற்றோல் விலையேற்றம் என்று சாதாரண மக்கள் வாழ்வாதாரம் இன்றி அல்லலுறும் நிலையில், ஜெனிவாவில் இலங்கைத் தூதுக்குழுவினர் அரச செலவில் அட்டகாசங்கள் செய்துள்ளனர். ஆடம்பர விடுதிகளில் தங்கியும், ஆடம்பர கார்களை வாடககைக்கு அமர்த்தியும் பெரும் பணத்தை செலவிட்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது பிரைவேட்(தனிப்பட்ட) பாதுகாப்பு அதிகாரிகளை வாடகைக்கு அமர்த்தி அவர்களுக்கும் பணத்தை வாரி இறைத்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைத் தூதுக் குழுவினர் சென்ற கார்கள், தங்கியிருந்த விடுதி என்பன அதிர்வின் புலனாய்வுச் செய்தியாளரால் இரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
|    செய்தியை வாசித்தோர்: 52352

DMCA.com