ATHIRVU.COM
விரிவான செய்தி
  
இலங்கையின் அபிவிருத்திக்கு இளைஞர்களே தேவை- ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்

07 February, 2010 by admin

அமெரிக்க கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங்கின் புதல்வர் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்-III இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவிலுள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காக பல நெடுங்காலமாக மார்ட்டின் லூதர் அகிம்சை முறையில் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உலக நாடுகள் அனைத்திலும் இன, சமூக சமத்துவமின்மையை இல்லாதொழிக்க அவர்கள் பொதுவான சட்டம் ஒன்றையும் வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் மரபை தனது "ரியலைசிங் த ட்ரீம்" (கனவை நனவாக்குதல்) எனும் அமைப்புமூலம் பரப்பி வருகிறார் ஜூனியர் மார்ட்டின் கிங். இவர் இலங்கையில் சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பில் விஜயத்தை மேற்கொண்டிருந்த சமயம் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, இலங்கையின் அபிவிருத்திக்கு இளைஞர் சமூகத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

கனவை நனவாக்குவதற்குப் பயன்படுத்தப்படவேண்டிய முக்கிய ஊடகம் இளைஞர்கள் ஆவர். கனவு நனவாகுவதற்கான சூழலை உருவாக்குவதில் எனது வாழ்க்கையை நான் செலவளிப்பேன். எங்களது நிறுவனத்தின் நோக்கவும் அகிம்சை வழியில் சமாதானத்தை வளர்ப்பது, இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் கவனம் எடுத்தல் என்பனவாகும். எந்தவகையான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமல்ல, இளைஞர்கள் அவர்களே நாட்டில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியவர்கள். அதுவே மிக முக்கியமானது எனக் கூறியுள்ளார் அவர்.


Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 4496







விளம்பரங்கள்






© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback