08 February, 2010 by admin
ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றுள்ள கையோடு போலீஸ் மற்றும் படையினரது உயர் மட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 208 போலீசாரும் திடீரென இடமாற்றப்பட்டுள்ளனர். இதில் 18 பிரதிப் போலீஸ் மாஅதிபர்களும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புச் செயலருக்கு எதிராகக் குரல்கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேற்படி இடமாற்றங்களுக்கு உள்ளான சில போலீஸ் அதிகாரிகள், தமது இடமாற்றங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவற்றை மீளக்கருத்திலெடுப்பது அவசியம் எனவும் கூறியுள்ளனர். இதேவேளை, இப்போது நடக்கும் இடமாற்றங்களும், கட்டாய ராஜினாமாக்களும் சரத் ஆதரவாளர்களுக்கு எதிராக எடுக்கப்படுவது என எதிர்க்கட்சிகள் குற்றம் கூறிவருகின்றனர்.